Wednesday, 1 February 2012

26. ஷஹீதா றீம் றய்யாஷீ (றஹ்)

 ஷஹீதா றீம் றய்யாஷீ (றஹ்) 

றீம் றய்யாஷீயின் பிறப்பு:
1982 ஆம் ஆண்டு காஸாவிலுள்ள ஒரு மார்க்கப்பற்றுள்ள, செல்வந்தக் குடும்பத்தில் றீம் ரய்யாஷீ பிறக்கின்றாள். அவளுக்கு ஆறு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். சிறுவயது முதல் கல்வியில் திறமையாக இருந்த றீம் தனது உயர்தரப் பரீட்சையில் 96 சராசரிப் புள்ளிகளை எடுத்து முன்னிலையில் நின்றாள். ஷரீஅத் அங்கீகரிக்கும் ஆடைகளை அணிகின்ற ஒரு மார்க்கப்பற்றுள்ள பெண்ணாக அவள் இருந்தாள்.

குடும்பப் பெண்:
ஒரு பெண் தனது வாழ்க்கையில் பல பாத்திரங்களை வகிக்கின்றாள். ஒரு மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக என்று அவளது பாத்திரங்கள் பெருகிச் செல்கின்றன. இந்த எல்லாப் பாத்திரங்களையும் றீம் றய்யாஷீ மிகச்சரியாக நிறைவேற்றினாள். சிறு வயது முதல் மார்க்கப்பற்றுதான் அவளது அணிகலனாக இருந்தது. இஸ்லாமும் -அதனை நடைமுறைப்படுத்துவதற்காக தான் கொண்டுள்ள கொள்கையும்தான் -அவளது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கின. வீட்டில் தன் பெற்றோருக்கு ஒரு முன்மாதிரியான -இஸ்லாம் எதிர்பார்க்கின்ற மகளாக விளங்கினாள். அதிகமாக நோன்பு நோற்கக் கூடியவளாகவும், குர்ஆன் ஒதக் கூடியவளாகவும், இரவு நேரங்களில் நின்று வணங்கக் கூடியவளாகவும் அவள் இருந்தாள். ஹலால்- ஹராம்களைப் பேணுவதில் அவள் மிகக்கரிசனையாக இருந்தாள். இவை அவளது தாய் அவளைப் பற்றிக் கூறும் சாட்சிகள்.

ஸியாத் அவ்வாத் என்பவர்தான் அவளது கணவன். அந்த வகையில், தனது குடும்ப வாழ்க்கையில், மனைவி என்ற பாத்திரத்தையும் அவள் மிகச்சரியாக நிறைவேற்றினாள். தனது கணவனுக்குப் பொருத்தமாக நடந்துகொண்டாள். ஒரு அன்பான துணைவியாக இருந்தாள்.

இவர்களுக்கு ளுஹா’, ‘முஹம்மத்என்று இரண்டு பிள்ளைகள்.

நிபந்தனை:
ஷஹீதா றீம் றய்யாஷீ திருமண முடிப்பதற்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் இது.
உயர்தரத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, அவளது மார்க்கப் பற்றைக் கண்ட பலர் அவளை திருமண முடிக்க முன்வந்தார்கள். ஆனால் அனைவரும் அவளைத் திருமணம் முடிக்காது பின்வாங்கினார்கள்.
காரணம் தன்னை மணமுடிக்க வருபவர்களிடம், "நான் ஒரு நாள் ஷஹீதாகுவேன். அதற்கு நீங்கள் எனக்குத் தடையாக இருக்கக் கூடாது" என்ற நிபந்தனையை அவள் இட்டதுதான்.

சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வின் பாதையில் தனது உயிரைத் தியாகம் செய்வதற்கு அவளுக்கிருந்த ஆசையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தைகள். இவை சாதாரண வார்த்தைகளல்ல. பாரிய, திட்டமிடப்பட்ட பயிற்றுவித்தலின் விளைவுகள்தான் இவை. திருமணம் என்று வந்தால், அழியக் கூடிய உலக விடயங்களுக்காக பேரம் பேசுகின்ற எமக்கு, இதில் நிறைய படிப்பினைகள் உள்ளன அதேபோன்று இதுபோன்ற இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

இஹ்வான்களுடனான தொடர்பு:
பலஸ்தீனில் அல் இஹ்வானுல் முஸ்லீமூன் அமைப்பு குறிப்பாக அதன் ஜிஹாதியப் பிரிவு ஹமாஸ்என்ற பெயரில் செயற்படுகின்றது. றீம் தனது ஆரம்பநிலைக் கல்வியைக் கற்கும்போதே, இஸ்லாத்தை அதன் பூரணவடிவில் நடைமுறைப்படுத்துபவர்களைக் கண்டறியும் ஆவல் அவளிடம் காணப்பட்டது.
அந்த வகையில் தனது பள்ளி வாழ்க்கையிலேயே ஹமாஸ் அமைப்புடனான தொடர்பு அவளுக்கு ஏற்படுகின்றது. அல்லது அல்லாஹ் இந்த உயர்ந்த பணிக்குப் பொருத்தமானவளாக அவளைத் தெரிவுசெய்கின்றான்.

இப்படியாக றீமின் வாழ்க்கை தொடர்கின்றது. திருமணத்தின் காரணமாக அவளது பாடசாலை வாழ்க்கை முடிவடைந்தாலும், அறிவு வாழ்க்கையை அவள் முடித்துக்கொள்ளவில்லை. ஹமாஸ் போன்ற ஒரு இஹ்வானிய அமைப்பில் அங்கத்துவம் பெற்றிக்கும் ஒரு பெண்ணால் அவ்வாறு அறிவை விட்டும் தூரமாக முடியாது.

ஆனால், ஹமாஸ் என்பது வெறுமனே ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பு என்றுதான் எம்மில் பலர் நினைத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால், அவ்வாறல்ல. அது தனது அங்கத்தவர்களை முழுமையாக இஸ்லாம் கூறுகின்ற ஒழுங்கில் உருவாக்கும் ஒரு அமைப்பு. றஸூல் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் இருந்தது போன்று, ஆயுதப் போராட்டம் என்பது அதன் ஒரு பகுதி மாத்திரமே.

ஷஹீதா றீம் பாடசாலை வாழ்க்கையை முடித்துக் கொண்டாலும், இஹ்வானியப் பாசறையில் தர்பிய்யத் பெறுகின்றாள். எமது சமூகத்தில் தவறாகப் புரியப்பட்டுள்ளது போன்று அறிவு என்பது வெறும் தகவல்களுடன் மாத்திரம் சுருங்கிய ஒன்றல்ல. மாற்றமாக அது நடத்தைக்கு வர வேண்டும்.
இந்த வகையில், அறிவிலும், மனப்பாங்கிலும், நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில்தான் இஹ்வான்களது பாடத்திட்டம் அமைந்துள்ளது. அதனை றீம் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றாள். அவளுக்கு அண்மையில் இருந்த முஸ்தபா பள்ளிவாசலில் நடைபெறுகின்ற மார்க்க வகுப்புக்களில் அவள் தவறாமல் கலந்துகொண்டாள்.

இறுதியில் அந்தப் பள்ளிவாசலிலே இஹ்வான்கள் சார்பாக மார்க்க வகுப்புக்களை நடாத்தும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொள்கின்றாள். அதேபோன்று ஹமாஸின் முக்கியமான அங்கத்தவர்களில் ஒருவராகவும் மாறுகின்றாள்.

போராட்ட உணர்வு:
முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களைக் காணும்போது ஷஹீதா றீம் றய்யாஷீ அவற்றைத் தாங்க முடியாது கதறுவாள். "ஏன் அடுத்த முஸ்லிம்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்?, அறபு நாடுகள் எங்கே போய்விட்டன?" என்று கூறிக் கூறி அழுவதாக அவளது கணவன் அவ்வாத் கூறுகின்றார்.

உண்மைதான், முஸ்லிம் சமூகம் எங்கே இருக்கிறது? தனது சமூகம் கொல்லப்படுவதை விட, தனது மார்க்க
சகோதரிகள் மானபங்கப் படுத்தப்படுவதை விட, தனது மார்க்கத்தின் புனிதஸ்தலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை விட, முஸ்லிம்கள் இழிவுபடுத்தப்படுவதை விட அவர்களுக்கு வேறு வேறு விடயங்கள்தான் முக்கியமானவையாக மாறியுள்ளன. அல்லது தங்களுக்கு பல தியாகங்கள் செய்யவேண்டி ஏற்படும் என்ற பயத்தில் சில விடயங்களுடன் மாத்திரம் இஸ்லாத்தைச் சுருக்கிக்கொண்டுள்ளார்கள். ஆனால், இப்படியான பல்லாயிரக் கணக்கான றீம் றய்யாஷீகளது கேள்விகளுக்கு நாம் மறுமையில் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
 

Reem alreashi4




























- ஏ.எஸ்.எம். நௌஷாட்

Source : http://www.meelparvai.net/


http://meelparvai.net/index.php?option=com_content&view=article&id=2294:2012-01-19-09-23-43&catid=317:2011-08-18-07-14-04
  


இந்த விடயங்கள் அவளிடம் வெறுமனே உணர்வுகளாக இருக்கவில்லை. அவற்றை நடத்தைக்குக் கொண்டுவர விரும்பினாள். முஸ்லிம்களுக்கான விடிவில் தன்னால் என்ன பங்களிப்பைச் செய்யமுடியும் என்று சிந்தித்தாள். ஹமாஸிடம் ஆயுதப் பயிற்சி எடுக்கின்றாள். அநியாயக்கார யூதர்களை அழிப்பதற்கு திடசங்கற்பம் பூணுகின்றாள்.

ஹமாஸ் போராளிகலுடன் சேர்ந்து போராடுவதற்கு அனுமதி கேட்கின்றாள். ஆனால், அவர்கள் மறுக்கின்றார்கள். தொடர்ந்தும் பயிற்சி எடுக்கின்றாள். தனது வீட்டுக்குப்பக்கத்தில் இருக்கின்ற ஹமாஸ் போராளிகளுக்கான உணவையும் அவள்தான் சமைத்துக் கொடுக்கின்றாள். அவள் ஷஹீதாவதற்கு முன்னைய நாள் மாலையில் கூட அவர்களுக்குத் தேனீர் உபகாரம் செய்துள்ளாள்.
இவ்வாறாக, தன்னால் முடியுமான எல்லா வழிகளிலும் போராளிகளுக்கு உதவிசெய்து, ஜாஹிலிய்ய மரணத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றாள். ஏனெனில், "போராடாமலும், போராட்ட உணர்வில்லாமலும் மரணிப்பவர் ஜாஹிலிய்யத்தில் மரணிக்கின்றார்" என்று றஸூல் (ஸல்) கூறியுள்ளார்கள்.

ஷஹாதத் தாக்குதல்:

றீம் றய்யாஷீ திருமண முடிப்பதற்கு முன்னர் ஒரு தடவை ஈர்ஸ்என்ற பகுதியில் தன்னுயிரை ஈந்த ஷஹாதத் கொடைத் தாக்குதல் நடத்த முயற்சித்தாள். இறுதி நேரம் வரை முயற்சி செய்தாலும், அவளால் குறிப்பிட்ட இலக்கை அடைந்துகொள்ள முடியாமல்போனது. இதனால் அத்தாக்குதல் நடைபெறவில்லை. கவலையடைந்த றீம் தனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் தருமாறு ஹமாஸிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனாலும் அவர்கள் அதனை மறுத்து வந்தார்கள். அப்போது அவளுக்கு வயது இருபத்து இரண்டு. இரண்டு பிள்ளைகள். மூத்த மகள் ளுஹாவிற்கு இரண்டரை வயது. பால்குடி மறக்காத மகன் முஹம்மதிற்கு ஒரு வருடமும் மூன்று மாதங்களும்.

அன்றுதான் றீமிற்கு வாழ்க்கையிலேயே மிக மகிழ்ச்சியான ஒரு நாள். காரணம், ஹமாஸின் மிக முக்கியமான தாக்குதல் ஒன்று அந்நாளில் நடைபெற இருந்தது. அதனை நடாத்துவதற்கு அவர்கள் சகோதரி றீமைத்தான் தெரிவுசெய்திருந்தார்கள். அவள் தனது பெற்றோரை, கணவனை, பிள்ளைகளை கடுமையாக நேசித்தாள். ஆனால், அவர்களை விட இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நேசித்தாள்.

இதனால்தான், பலவீனமான ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தக் கூடிய மரணச்செய்தி அவளை மகிழ்வித்தது. அதன் மூலம்தான் அல்லாஹ்வை நெருங்கப் போவதையும், சுவர்க்கத்தில் தனது பெற்றோர், கணவன், பிள்ளைகளுடன் நிரந்தரமாக இருக்கப்போவதையும் நினைத்து அகமகிழ்ந்தாள். அங்கு நிச்சயமாக, தனது பிள்ளைகளுடன் கொஞ்சி மகிழும் வாய்ப்பை அல்லாஹ் தருவான் என்பதை உறுதியாக நம்பினாள்.

அன்று 2004 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி. வழமைபோன்று அன்றும் இரவு முழுவதும் றீம் றய்யாஷீ நின்று வணங்குகின்றாள். நோன்பும் நோற்கின்றாள். 10 கிலோ பாரமான வெடி மருந்தை தனது இடுப்பிலும், கால்களிலும் கட்டி கொண்டு, தனது கணவனுக்கு முஸாபஹா செய்துவிட்டு, தனது குழந்தைகளை இறுதியாக (உலகில்) முத்தமிட்ட பின் வெளியேறிச் செல்கின்றாள்.
காஸாவின் வடக்காக உள்ள ஈர்ஸ் என்ற இடத்திலுள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் சோதனைக் கூடம்தான் தாக்குதல் இலக்காக வழங்கப்பட்டிருந்தது. றீம் றய்யாஷீ தைரியமாக நடந்து செல்கின்றாள். வெடிகுண்டுகளின் பாரம் காரணமாக அவளது நடையில் மாற்றம் இருந்தது. விசாரிக்கப்பட்டபோது, கால் சுகயீனம் என்று கூறிவிட்டு செல்கின்றாள்.

சோதனைச் சாவடியில் இருந்தவர்களுக்கு சந்தேகம் வந்தபோது, முக்கியமான இராணுவத் தலைவர்களும், வெடி மருந்து ஆய்வாளர்களும் அங்கு விரைந்து வருகிறார்கள். வந்ததுதான் தாமதம் றீம் றய்யாஷீ ஷஹீதாஎன்ற பட்டத்தைப் பெற்றுக்கொள்கின்றாள். இஸ்ரேலிய ராணுவத்தின் முக்கியமான நான்கு தலைவர்கள் அவ்விடத்திலேயே மரணிக்கிறார்கள். பதினொரு பேர் படுகாயத்திற்கு உள்ளாகின்றார்கள்.

இஸ்லாத்தின் எதிரிகளை கதிகலங்க வைத்துவிட்டு, ஷஹீதா றீமின் ஆன்மா தனது ரட்சகனின் பொருத்தத்தை நாடி மலக்குமாரால் சுமந்து செல்லப்படுகின்றது. அவளது வாழ்க்கை அர்த்த முள்ளதாக மாறுகின்றது. (இன்னாலில்லாஹி)

இது ஒரு கற்பனைக் கதையல்ல. லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்த குற்றத்திற்காக அன்றாடம் அல்லல்படுகின்ற எமது சொந்தங்களின் விடிவிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு சகோதரியின் உண்மை சம்பவம்.

மறுமையில் "நீ எனது அடியார்களின் கஷ்டத்தை நீக்குவதற்கு என்ன செய்யதாய்?" என்ற அல்லாஹ்வின் கேள்விக்கு அவள் பதிலைத் தயாராக வைத்துள்ளாள். ஆனால், நாம்? நமது நிலைப்பாடுகள் எவ்வாறுள்ளன? நாம் எந்தளவிற்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நேசிக்கின்றோம்?

றஸூல் (ஸல்) அவர்களது ஹதீஸைப் பாருங்கள்: "முஃமின்கள், தமக்கு மத்தியிலான அன்பிலும், பாசத்திலும், இரக்கத்திலும் ஒரே உடம்பைப் போன்றவர்கள். அதில் ஒரு உறுப்பிற்கு ஏதும் கஷ்டங்கள் ஏற்பட்டால், ஏனைய உறுப்புக்கள் விழித்திருந்தும், நோய் வாய்ப்பட்டும் துக்கம் அனுஷ்டிக்கின்றன" (புகாரி, முஸ்லிம்).

இந்த சமூகத்தைக் காப்பதற்கு ஆயிரம் ஆயிரம் றீம் றய்யாஷீக்கள் தேவையாக உள்ளார்கள். இது குறித்து சற்று சிந்திப்போமா?

Tuesday, 31 January 2012

25. பெண்களின் மெளனப் புரட்சி - இஸ்லாமிய பெண்கள் அறக்கட்டளை (ITW)

கடையநல்லூரிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்கள் அறக்கட்டளை(ITW) 
பெண்களுக்கான வாராந்திர வகுப்புகள், நூலகம், நூல் விற்பனை நிலையம்,கம்ப்யூட்டர் சேவைக்கல்வி, தையல் பயிற்சிப் பள்ளி, சிறுசேமிப்புக் கடனுதவி,தாவா நெட், ஹைர உம்மத் காலாண்டிதழ்,எனப் பல தளங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

சமீப காலமாக பெருகி வரும் கள்ளக் காதல், ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக இந்த அறக்கட்டளை ‘ஆதலினால் காதல் செய்யாதீர்’ என்ற தலைப்பில் ஹைர உம்மத் சிறப்பிதழை வெளியிட்டது

.தமிழகம் முழுவதும் மிகப்பெரும் விழிப்புணர்வு அலைகளை ஏற்படுத்திய இவ்விதழ் தற்போது IFT யின் வெளியீடாக புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.

இப்பணியின் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 22ஆம் தேதி கடையநல்லூர் பேட்டை NMMAS ( நமாஸ்) பள்ளியில் ‘ நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?’ என்ற குர்ஆனின் 81:26 ஆம் வசனத்தை மையமாக வைத்து ஒரு நாள் பெண்கள் மாநாட்டை நடத்தியது.

மாநாடு K.A.ஃபாத்திமாவின் திருக்குர்ஆன் விரிவுரையுடன் தொடங்கியது. மாநாட்டு அமைப்பாளர் V.I.ஆபிதா பர்வீன் தொடக்க உரையாற்றினார். ‘பெண்களால் சாதிக்கமுடியும் என்பதற்கான சான்றுதான் இந்த மாநாடு.இது இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை.இந்தத் தீமை முற்றிலும் ஒழியும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு மாதங்களில் ‘ஒழுக்கத்தை நோக்கி..’ என்ற கேம்பைன் நடத்த உள்ளோம்’ என்று கூறினார்.

‘சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் ஃபாத்திமா ஜலால், பெண்களின் பங்களிப்பைப் பட்டியலிட்டதுடன் பெண்களால்தான் சமூக மாற்றங்கள் நிகழும் என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.

மாநாட்டின் மையக்கருத்தான ‘ நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?’ என்ற தலைப்பில் மெளலவி நூஹ் மஹ்ழரி உணர்வுப் பூர்வமான உரையை நிகழ்த்தினார்.சத்திய சஹாபா பெண்மணிகளின் பயணம் எங்கே சென்றது?’ நாம் இன்று எங்கே செல்கிறோம்? இனி நாம் எங்கே செல்ல வேண்டும்? என்று வரலாற்று உதாரணங்களுடன் தமக்கே உரிய தனிப்பாணியில் எடுத்தியம்பினார்.இந்த உரையைக்கேட்டு பலர் கண்கலங்கினர்.

’கலாச்சார சீரழிவுகளுக்கிடையே கண்ணியமாக வாழ்வது எப்படி?’ என்ற தலைப்பில் டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் தமது உரையில் கலாச்சார சீரழிவுகளையும், அதனை எதிர்த்துக் கொண்டு எவ்வாறு கண்ணியமாய் வாழவேண்டும் என்பதையும் நடைமுறைப்படுத்தும் விதத்தில் பட்டியலிட்டார்.

K.A.மெஹரின் ஹதீஸ் விளக்கத்துடன் இரண்டாம் அமர்வு தொடங்கியது.மதிய அமர்வில் ‘தீமைகள் புயலாய் வீசும்போது..’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.தீமைகளுக்கெதிரான ஆண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் ITW தலைவர் நஜ்மா கருத்துரை வழங்கினார்.பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உம்மு ரோஜானும்,சமுதாய இயக்கங்களின் பங்களிப்பு குறித்து ஆயிஷா பானுவும் கருத்துரை வழங்கினர்.டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் அவர்கள் கருத்தரங்கை வழி நடத்தி நிறைவுரையாற்றினார்.காலை உரையின் இரண்டாம் பகுதியாக இவ்வுரை அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நிறைவுப் பேருரையாற்றிய மெளலவி ஹனீஃபா மன்பஈ உணர்வுப்பூர்வமான ஆழமான உரையை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியை நிஸ்மியா தொகுத்து வழங்கினார்.

மாநாட்டுத் துளிகள்

* சற்றேறக் குறைய இரண்டாயிரம் பெண்கள் ஒன்று திரண்டனர்.
* 35 பெண் தொண்டர்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்தனர்.
* 10மணி நிகழ்ச்சிக்கு 9:30 மணிக்கே அரங்கு நிரம்பிய காட்சி பெண்களின் விழிப்புணர்வை பறைசாற்றியது.
* காலையிலும்,மாலையிலும் தேனீரும்,மதியம் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது.
* டோக்கன் முறையில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று உணவைப் பெற்றுக்கொண்டனர்.
* மாநாட்டை அனைவரும் காணும் வகையில் வெளிஅரங்குகளிலும், கீழ்த்தளத்திலும் 6 LCD திரைகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
* நாகர்கோவில்,காயல்பட்டினம்,உத்தமபாளையம், திருநெல்வேலி,தென்காசி,வீரசிகாமணி,புளியங்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் கலந்துகொண்டனர்.
* வெளியூரிலிருந்து வந்த ஆண்களுக்கும்,சிறப்பு விருந்தினர்களுக்கும் சிறப்புத் திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
* புத்தகக் காட்சி,சமரசம்,இளம்பிறை,ஹைர உம்மத்,சந்தா,விற்பனைப் பிரிவும் இடம் பெற்றது.
* இடையிலேயே யாரும் செல்லாமல் நிகழ்ச்சி முடியும் வரை பெண்கள் அமர்ந்து உரையைக் கேட்டது சிறப்பான முன்னுதாரணம்.

தகவல் : V.S.முஹம்மது அமீன் 




-------------------------------------------------------------------------------------------------------------------

காதல் என்று ஓடி போன பெண்களுக்கு நன்றி. 


சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.