Wednesday, 14 September 2011

25. லாரன் பூத் (Lauren Booth)

லாரன் பூத் Lauren Booth



எல்லாப் புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!
''என் மகள்களின் மூன்று கேள்விகள்' by Lauren Booth'' 


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ்இனியும் விலகாது.
லாரன் பூத் (Lauren Booth) - அரசியல் விமர்சகர்ஊடகவியலாளர்,பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.இவற்றிற்கெல்லாம் மேலாக,பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.அதற்கு காரணம்நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம்அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.


தற்போதைய காலக்கட்டத்தில்இஸ்லாமை தழுவும் பலரும்,குர்ஆனை முழுமையாக படித்துபலவித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்தான் தழுவுகின்றனர்.ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறுவிதமானது. இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைதான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்துதானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக்கொண்டவர் இவர். பின்னர்தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம்பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷா அல்லாஹ்.   ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக்கொள்வாராம்,
Please God, என் அம்மாவையும்அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்க வை.
டீனேஜ் பருவத்தின்போது பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம்தான் அவரை கொன்றோம்என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
ஒன்றுஅவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவதுஅவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.  
9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.பிறகுசில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு,மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல்முறையாக மேற்குகரைக்கு சென்றார்.
டெல் அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்கவிடாமல் என்னை திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.   
சுமார் ஐந்து நாட்கள் மேற்குகரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந்தோட ஆரம்பித்தன.
என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது. 
இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிரஇஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மதுபார்ட்டிகள் என வழக்கம்போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.
2008-ல் மறுபடியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின்போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்குஇஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒருநாள்இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருக்கஅவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி. "மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப்படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப்படுத்த தொடங்கினார்.பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்குகரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வரவேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.ஆனால்திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்தபோதுஇவரது ஆவணங்களை கிழித்தெறிந்துஇவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும்இரண்டு குழந்தைகளையும் பார்க்கவில்லை இந்த சகோதரி. ஆனால்,இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டுஎன்னுடன் அழுதுக்கொண்டுஎன்னை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை. 
பாலஸ்தீனியர்களின் அன்பும்அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும்இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
இப்போது அரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை. 
ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங்கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
இவர்களுக்கே சிறிதளவுதான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா?நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர்தான்.  
ஆனால்அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும்விட தாங்கள் அல்லாஹ்வையும்,அவனது தூதரையும் நேசிப்பதாகவும்அதனால்இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.அவ்வளவுதான்.....அவர்களின் அன்பும்இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.
'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.
இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்து வருமென்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார் லாரன்.பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதேதம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசைதிருப்பத்தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.


மேற்சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் லாரன் பூத்.இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதிவிலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்கவழக்கங்களை விட்டொழித்துவிட்டார் சகோதரி லாரன் பூத். "எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாராஎன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டுவிட்டேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்வது எளிதாகவே இருந்தது.ஆம்இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவு படித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன்சுமார் நூறு பக்கங்கள் என்று.இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்தவரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடுபடுகின்றேன். இது வாரப்பத்திரிகை அல்ல.அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன்.  By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனாஅல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனாஎன்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரைஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான். இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.முகத்தை மூடும்விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால்இஸ்லாம் அதனை வலியுறுத்தவில்லை என்பது என்னுடைய புரிதல்.என் மனமாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன் 

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.
இஸ்லாம் உன்னை மாற்றிவிடுமா?
நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?
முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்என்பது. கடைசி கேள்விக்கான பதில்ஒரு பெரிய 'NO'. என் அம்மாவை பொருத்தவரைஎன்னுடைய மகிழ்ச்சிதான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம் கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்தமதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்என்று கூறினார். இப்போது புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால்நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. I simply don’t want to.மறுமணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமணமுறிவிலிருந்து தற்போது மீண்டுக்கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக்கொண்டிருக்கின்றது.நேரம் வரும்போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக்கொண்ட மார்க்கதிற்கேற்பஎன்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும்.என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?'என்று.எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.ஆனால்என்னுடைய மனமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால்நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் காட்டிய அணுகுமுறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்'.
சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'. 
இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக்கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகுஎன் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.  
ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'
என்னுடைய பதில்: 'இல்லை'. 
'இனியும் புகைபிடிப்பீர்களா?' 
புகைபிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.   
அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது. 
'தற்போது முஸ்லிமாகிவிட்டதாக கூறுகின்றீர்கள்இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'
என்ன???????
இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும்விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.  
'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன், 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'. 
'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்என்று கூறி ஆரவாரம் செய்துவிட்டு விளையாட சென்றுவிட்டார்கள். 
நானும் சொல்லிக்கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்துஇஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.டோனி பிளேர்தான் குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும்தான் இறைநம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்.  
Please Note:இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

Sr. Lauren Brown's Official Website: 1. http://www.laurenbooth.co.uklink
References: 1. Lauren Booth explains why she feel in love with Islam -news.com.au. link 2. Lauren Booth’s Spiritual Journey to Islam - The American Muslim. link

உங்கள் சகோதரன்,
என்றும் அன்புடன்

ஜுவைரியா பேகம்

மேலக்காவேரி.





24. யுவான் ரிட்லி - லண்டன் பத்திரிக்கையாளர் Yvonne Ridley-Journalist

யுவான் ரிட்லி - லண்டன் பத்திரிக்கையாளர் 



Yvonne Ridley 

Former Taliban captive, 

convert to Islam 


 Broadcaster, Journalist, Human Rights Activist


Taliban Pidiyil Yvonne Ridley Book


Tamilil : M. Gulam Mohamed, Vergal Pathippagam, Chennai



http://yvonneridley.org/





தாலிபான் பிடியில் யுவான் ரிட்லி புத்தகம் - தமிழில்


வேர்கள் பதிப்பகம்


மொழி பெயர்ப்பு:  மு. குலாம் முஹம்மது 


IN THE HANDS OF TALIBAN  BOOK by YVONNE RIDLEY IN TAMIL
PUBLISH : VERGAL PUBLISHER, CHENNAI - 1.
TRANSLATE : M. GULAM MOHAMED
PRICE : INR 80.00
CONTACT : +91 44 455 66 909
                       +91  9444 23 95 94
WEB SITE : www.darulislam.in


-------------------------------------------------------------------


அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இஸ்லாத்தின் நற்செய்தி அடையாளம் காணப்படும்:யுவான் ரிட்லி.


அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை 


மேற்க்கொண்டாலும்




 இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின்


 நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் 


ஒரு நாள் வந்தே தீரும் என 




பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.



கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "





அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.

ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன.

ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும்,ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.

இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். 



இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.

ஏகாதிபத்தியமும், சியோனிஷமுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். 



முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்




Tuesday, 13 September 2011

23. பெண்களே! யார் மீது உங்கள் நேசம் அதிகம் ?

பெண்களே!  யார் மீது உங்கள் நேசம் அதிகம் ?



உஹது போருக்கு பின் :

தீனார் குடும்பத்தை சார்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம்கள்
வழியில் சந்தித்தார்கள் .

அந்த பெண்ணின் தந்தையும், கணவரும், சகோதரும் போரில் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இவர்களின் மரண செய்திய முஸ்லிம்கள் அவருக்கு கூறினார்கள்.

ஆனால் அப்பெண்மணி, அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள் ?
என்று கேட்டார்.

முஸ்லிம்கள், இன்னாரின் தாயே! நீர் விரும்பியதை போன்று, நபியவர்கள் நல்ல முறையில் இருக்கிறார்கள் . எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
என்று கூறினார்கள்.

அதற்கு, அந்த பெண் எனக்கு அவர்களை காட்டுங்கள். நான் அவர்களை
பார்க்க வேண்டும் என்றார். நபியவர்களை கண் குளிர பார்த்த பிறகு,
உங்களை பார்த்த பின்னால் எல்லா துன்பங்களும்,
எங்களுக்கு இலகுவானதே! என்று அப்பெண்மணி கூறினார் .

Source : அர்ரஹீக் அல் மக்தூம், பக்கம் 290

வெளியீடு : தாருல் ஹூதா



33:6இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட 
மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் 
அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். - அல் குர்ஆன்




33:56இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். 
மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். 
முஃமின்களே நீங்களும் அவர் மீதுஸலவாத்து சொல்லி 
அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.- அல் குர்ஆன்





பதிவு : வஸிமா பின்த் ஹசன்








Tuesday, 6 September 2011

22. நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் - நமது அன்னையர்கள்

நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் 


நமது அன்னையர்கள் 


1. கதீஜா பின்த் குவைலிது (ரழி)


2. சவ்தா பின்த் ஜம்ஆ (ரழி)


3. ஆயிஷா பின்த் அபூபக்ர்(ரழி)


4. ஹப்ஸா பின்த் உமர் (ரழி)


5. ஜைனப் பின்த் குஜைமா (ரழி)


6. உம்மு சலமா ஹிந்த் பின்த் அபூ உமையா (ரழி)


7. ஜைனப் பின்த் ஜஹ்ஷ் இப்னு ருபாப் (ரழி)


8. ஜூவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரழி)


9. உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூ சுப்யான் (ரழி)


10. ஷபியா பின்த் ஹய் (ரழி) 


11. மைமூனா பின்த் ஹாரிஸ் (ரழி) 


மாரியா கிப்திய்யா - மன்னர் முகவ்கிஸ் வழங்கிய அடிமை பெண் 


ரைஹானா பின்த் ஜைது 


( பனு குறைளா சமுகத்தை சார்ந்த அடிமை பெண் )


Source : Al Raheeq Al Makhtoom, Page 492


Published : Darul Huda




33:6இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட 
மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் 
அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்.- அல் குர்ஆன்


பதிவு : காமிலா பின்த் இஸ்குல்லாஹ்

Monday, 5 September 2011

21. கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!

கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!

கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போன்றவை குறித்து விளக்குகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில்குமார்.

பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும்.

அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும், கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.

பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.

மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51.

மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மனஉளைச்சல், உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும்.

சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்னை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது, சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல், மார்பக புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.

பாதுகாப்பு முறை: அதிகமாக உதிரம் போதல், வலி, சிறிய கட்டிகள், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம்.

இது போன்ற பிரச்னைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம். பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது.

நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும்.

கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக்கும். கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப் பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ரெசிபி

ஆட்டு ஈரல் சூப்: ஆட்டு ஈரல் கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் 10 உரித்து வெட்டிக் கொள்ளவும், தனியா, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயம் - பாதி, தக்காளி 1, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு. தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும்.

அரிசி களைந்த தண்ணீரை குக்கரில் ஊற்றி அதில் ஈரல் துண்டுகள், அரைத்த பொடி, வெங்காயத்தை தனியாக வதக்கி அரைத்து இத்துடன் சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியில் மிளகுத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்கள் வாரம் ஒரு முறை இதை அருந்தலாம்.

பனீர் கேரட் குருமா: பனீர் அரை கப், கேரட் கால் கிலோ, வெங்காயம் 4, தக்காளி 4, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய், கரம் மசாலா அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண் ணெய் விட்டு சோம்பு, பட்டை கிராம்பு உள்ளிட்டவற்றை வதக்கவும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை தனியாக வதக்கி அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நீள வாக்கில் கேரட்டை வெட்டி போடவும். தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். மஞ்சள் தூள், உப்பு,  கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளி, வெங்காயம் அரைத்த பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும்.

இறுதியில் பனீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.

நூடுல்ஸ் கட்லட்: தேவையான அளவு நூடுல்சை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணியை அரை வேக்காடாக எடுத்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த நூடுல்ஸ், வேகவைத்த காய்கறிகள், உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வெண்ணெயைத் துருவி இதில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா, பிரட் தூள் ஆகிவற்றை எடுத்துக் கொள்ள வும். பிசைந்த கலவையை பிடித்த வடிவத்தில் தட்டி முதலில் மைதா வில் பிரட்டி பின்னர் ரொட்டித் தூளில் பிரட்டி பின்னர் தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.

டயட்

அடிக்கடி அபார்ஷன், அதிக டெலிவரி, மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, சிறுநீரகத் தொற்று, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல் நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

பரம்பரை காரணங்களாலும் பெண்களுக்கு வரலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம்.

அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரித்தல், தினமும் வாக்கிங், சத்தான உணவு என்று வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் தான் கருப்பையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள், ஐஸ் கிரீம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அரிசி உணவுகளையும் குறைக்க வேண்டும். உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய்கறி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். முளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை வாரம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும்.

கருப்பையை எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரி அளவுக்கான உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் கருப்பை எடுத்த உடன் பெண்களின் எடை அதிகரிக்கும்.

மேலும் சாதத்துக்கு பதிலாக பழங்கள், கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம். இத்துடன் பிறப்புறுப்பு, கருப்பை வாய்ப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு சுத்தத்தை கடை பிடிக்க வேண்டியதும் அவசியம் என்கிறார்  உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும்.

வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத் தாள், காயவைத்த கறுப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்கு ஏற்படும்.

விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குண மாகும்.

வல்லாரைக் கீரை சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்  கருப்பை பலப்படும்.




Best Regards,Dr.M.SATHICK, HHA.,RNMP.,ND.,FRIM.,MD(Acu)
Safa Acupuncture Clinic, Kottar, Nagercoil.
Mobile:
94433 89935, 89034 89935.
Web: http://www.darulsafa.com/


20. இஸ்லாமிய விரோத வலைத்தளங்களை தாக்கும் சவுதி பெண்மணி நூப் ராஷித்

இஸ்லாமிய விரோத வலைத்தளங்களை தாக்கும் சவுதி பெண்மணி - நூப் ராஷித்

அமெரிக்காவில் கல்வி கற்கும் சவுதி அரேபிய யுவதி ஒருவர் டென்மார்க் நாட்டில் இருந்து இயங்கும் 23 வலைத்தளங்களை தனது திறமையின் மூலம் தாக்கியுள்ளார்,

இவ்வளைத்தலங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிராக இயங்குவதை தமது கொள்கையாக கொண்டுள்ளதுடன் இவைகள் அனைத்தும் நபி பெருமானார் (ஸல்) அவர்களை தூற்றுவதை வாடிக்கையாக கொண்ட இணையத் தளங்களாகும் என அல் மதீனா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 பத்திரிகைக்கு பேட்டியளித்த நூப் ராஷித் என்ற குறித்த பெண்மணி நபிகளாரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட விடயங்களையும் மற்றும் கார்டூன்களையும் வெளியிடும் தளங்களையே ஹாக்கிங் செயற்பாடு மூலம் செயலிழக்க செய்ததாக குறிப்பிட்ட அவர் தனது பார்வையில் இத்தளங்களின் செயற்பாடுகள் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக பல ஆபாச வலைத்தளங்களும் நூப் ராஷித் இனால் செயலிழக்க செய்யப்பட்டதோடு ஆபாச படங்களை எடுத்து அதை பயன்படுத்தி இளம் பெண்களை பயமுறுத்திய ஒரு நபரின் கணனியின் செயற்பாட்டை கட்டுப்படுத்தி குறித்த ஆபாச படங்களை அழித்து பயமுறுத்தல்களுக்கு உள்ளான இளம்பெண்களையும் காப்பாற்றியுள்ளார்.
கணணியை கற்பதற்கான ஆர்வமே தான் இந்த துறையில் நிபுணத்துவம் அடைய காரணமாகும் என்று நூப் தெரிவித்துள்ளார்.
ஒரு இளைஞன் ஒரு யுவதியை அவளது அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டி அவளை திருமணம் செய்ய முற்பட்ட சம்பவம் தான் ஹாக்கிங் துறையில் திறமைகளை வளர்க்க தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிட்ட நூப், இச்சம்பவத்தின் பின்னர் தன்னுடைய நண்பர்கள் மூலமே ஹாக்கிங் கலையை கற்றதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் மேலும் பல பெண்களை இவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து நூப் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த டென்மார்க் தளங்களை தாக்கிய நூப் அவ்வலைத்தளங்கள் நடாத்துவோருக்கு பெருமானார பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் பொருத்தமான தகவல்களை அனுப்பியுள்ளார்.
இணையத்தை பாவிக்கும் இளம்பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நூப் வலியுறுத்தியுள்ளார். கணணி பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்கு அதற்கான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கணணிகளை கொடுக்கும் போது இளம் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இவ்வாறான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கடமை புரியும் சில நபர்கள் இளம் பெண்களின் கணனிகளில் உளவு மென்பொருள்களை (Spyware) உட்புகுத்தும் சாத்தியங்கள் உண்டு எனவும் தெரிவித்தார்.
மேற்குலக ஊடகங்களின் தகவல்களின் படி அண்மையில் 900 க்கு மேற்பட்ட டென்மார்க் வலைத்தளங்கள் ஹாக்கிங் தாக்குதலுக்கு உள்ளாயின.
ஒரு சர்வதேச இணைய கண்காணிப்பாளர் தகவல் தருகையில் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இவ்வாறு பெறும் எண்ணிக்கையான வலைத்தளங்கள் தாக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும் என்று தெரிவித்துள்ளார்.
அநேகமான ஹாக்கிங் தாக்குதல்களின் போது குறித்த தளங்கள் செயலிளப்புக்கு மாத்திரமே உள்ளாகும் அதேவளை சில சந்தர்ப்பங்களில் டென்மார்க் அரசையும் மக்களையும் எச்சரிக்கும் வாசகங்கள் பதிவேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்தார். தாக்கப்படும் தளங்கள் பின்னர் மீண்டும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவைப்போல் சவுதியிலும் ஹாக்கிங் குற்றத்துக்காக கடுமையான தண்டனைகள் அமுலில் உள்ளமை குறிப்பிட தக்கது.
source :

Monday, 15 August 2011

19. மேலப்பாளையம் வளர்ச்சி அறக்கட்டளை

மேலப்பாளையம் வளர்ச்சி அறக்கட்டளை

Melapalayam Improvement Trust

Melapalayam Valarchi Arakkattalai  

Website : www.melapalayamit.in



Sunday, 7 August 2011

18. ஹிஜாப் (புர்கா) ஏன்?

ஹிஜாப் (புர்கா) ஏன்?


http://www.scribd.com/doc/17139412/HIJAB-BURQA-WHY-in-TAMIL

by

vajeeha
vaseema

17. எல்லாப் பெண்களும் மகாராணிகளே!


அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
 
[ ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?''

முஸ்லிம் கேட்டார்; 'உங்கள் நாட்டு எலிஸபெத் ரானியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?''

அவசர அவசரமாக ம்றுத்தார் அந்த ஆங்கிலேயர்; ''அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே....!''

முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ''எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.' எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குளுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.'']

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது கிறந்ததாகும்.'' (நூல்:- தபரானி)

மேற்கூறப்பட்ட நபி மொழியை உற்றுநோக்கும்போது முஸ்லிம் சமூகத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர் மார்க்கக் கட்டளையை புறக்கணித்து விட்டு மேல்நாட்டு கலாசாரங்களை பின்பற்றுகின்றனர்.

சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன்மகள், சகோரனின் மனைவி, சாச்சி, மாமி, போன்றோருடன் கைக்குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நாம் தவிர்ந்துகொள்வது நன்று. இது கையின் விபசாரங்களில் ஒன்றாகும்.

பின்வரும் ஹதிஸ்களை சற்று கவனித்தல் நன்று.
''இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. இரு கைகளும் விபசாரம் செய்கின்றன. இரு கால்களும் விபசாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபசாரம் செய்கிறது.'' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்: ''நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாபஹா செய்ய கைகுலுக்க மாட்டேன்.'' (அறிவிப்பாளர்: உமைமா பிர்த் ருகைகா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: இப்னுமாஜா)

மேலும்: ''நிச்சயமாக நான் பெண்களின் கைகளைத் தொடமாட்டேன்.'' (நூல்: தபரானி)

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)

மேற்கூறப்பட்ட பொன்மொழிகள் "நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிடுவேன் என மிரட்டும் கணவன்மார்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.

ஒரு ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அந்நிய ஆணுடனோ முஸபாஹாச் செய்வது ஹராமாகும். அது கை உறை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாபஹாச் செய்தாலும் சரியே!

ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி அதை தடுக்கின்றீர்கள்?''
முஸ்லிம் கேட்டார்; 'உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?''

அவசர அவசரமாக மறுத்தார் அந்த ஆங்கிலேயர்; ''அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே....!''

முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ''எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. 

அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும். 

எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குளுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.''

கேள்விகேட்ட ஆங்கிலேயர்; அந்த முஸ்லிமின் பதிலைக்கேட்டு விக்கித்துப் போனார் என்று சொல்லவும் வேண்டுமோ!
 
Regards,
Reeshma Yaser...

Thursday, 4 August 2011

16. பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன?

பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் காரணம் என்ன?

-- [ ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டால், அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள்.


இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.


பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.]

தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே!

சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாது.

ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள் எழும்.

உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடலாம். அதனால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இதனால் அவள் பெற்றெடுக்கும் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம்.

இதேப்போல, திருமணத்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொண்டால், அது அந்த பெண்ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.

ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள்.

இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.

சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் வேலைக்குச் செல்வதும் உண்டு.

உங்கள் பெண் எங்கே என்று கேட்பவர்களுக்கு எந்த பெற்றோரால், என் மகள் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடியும். கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.

இந்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமாகாத சகோதரிகள் இருப்பின், அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய்வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு.


சமுதாயத்தின் ஆணி வேரே பெண்தான். இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் தவறு செய்ய நேர்ந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது முழு மரமும்தான் என்று பயந்துதான் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளையும் இந்த சமுதாயம் விதித்துள்ளது.


24:31இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள்பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்


24:2விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்


3:85இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்


33:59நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.





Wednesday, 3 August 2011

15. பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி - முஸ்லிம் பெண் சாதனையாளர்


பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி - முஸ்லிம் பெண் சாதனையாளர்

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"
என்று அன்று பாடிவைத்தான், பாரதி.

நவீன உலகில் எத்தனையோ பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்களாய், பல்துறை நிபுணிகளாய், சாதனையாளர்களாய்த் திகழ்ந்து வருகின்றனர்.

"இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது; ஃபர்தாவுக்குள் அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது" என்றெல்லாம் உலகெங்கிலும் பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்க்கம் என்ற பெயரால் பெண்களுக்கு இறைவன் கொடையாக அளித்துள்ள திறமைகளை வெளிப்படுத்த விடாமல் மூலையில் முடக்கிப் போடும் சுயநலவாதிகளான ஒருசில ஆண்களால் இந்தக் கோஷம் மேலும் மேலும் வலுப்பெற்று வருவதையும் நாம் மறுப்பதற்கில்லை.

 எனினும், இத்தகைய கோஷங்களைப் பொய்ப்பித்து, தாம் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளையெல்லாம் வெற்றிகொண்டு சாதனைகளை நிலைநாட்டிவரும் முஸ்லிம் பெண்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுள் ஒருவர் என்ற வகையில்,

 உலகப் புகழ்பெற்ற 

இஸ்லாமிய அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவியின் 

மகள் பேராசிரியை   இல்ஹாம் அல் கர்ளாவியின் 

சாதனைகளைச் சுருக்கமாக நோக்குவோம். 

பொதுவாக இயற்பியல், அணுசக்தி, வானியல் முதலான துறைகள் பெண்களுக்குப் பொருத்தமானவை அல்ல; அத்துறைகளில் பெண்கள் நின்றுபிடிப்பதோ சாதனை படைப்பதோ சாத்தியம் இல்லை எனும் கருத்தியல்கள் நம் சமூகத்தில் காலங்காலமாய் நிலவி வருவதை நாமறிவோம். அத்தகைய கருத்தியல்களையெல்லாம் கட்டுடைப்புச் செய்தவர் என்ற பெருமையை அரபு முஸ்லிம் பெண்மணியான இல்ஹாம் அல் கர்ளாவி பெற்றுக் கொள்கின்றார்.

1981 ஆம் ஆண்டு கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்ஸி பட்டம் பெற்ற இல்ஹாம், 1984 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்திலே பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்து அணுசக்தித் துறையில் எம்.எஸ்ஸி பட்டத்தையும், 1991 ஆம் ஆண்டு மின்னியல் துறையில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

1981 முதல் 1984 வரை கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய கல்விப் பணியைத் தொடங்கிய இவர்,  1984-1991 காலப் பகுதியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 1991 முதல் இன்று வரை கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் இணைப் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகின்றார். அதுமட்டுமன்றி,  1998-1999 ஆம் ஆண்டுகளில் லண்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறைகளில் இணை ஆய்வாளராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய கல்வியியல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாகப் பல்வேறு அமைப்புக்களின் நிர்வாகம், திட்டமிடல் முதலானவற்றுக்குப் பங்களிப்புச் செய்யுமுகமாகப் பல்வேறு செயற்குழுக்கள், அமைப்புக்கள் என்பவற்றிலும் இவர் அங்கத்துவம் வகித்துள்ளார். சிலவற்றில் செயற்குழுத் தலைவியாகவும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அந்த வகையில், 2007 முதல் கட்டார் பல்கலைக்கழக ஆய்வுக் கொள்கைகள் தொடர்பான செயற்குழு உறுப்பினராகவும், 2005 முதல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு உறுப்பினராகவும்,  2004 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆய்வுக் குழுத் தலைவியாகவும் இவர் சேவையாற்றியுள்ளார்.


மேலும், 2006-2007 ஆம் ஆண்டுகளில் கணித மற்றும் இயற்பியல் துறை வரவுசெலவுத் திட்டக்குழுத் தலைவியாகவும், 2005-2006 ஆம் ஆண்டுகளில் அதே துறையின் வெளியுறவுக் குழுத் தலைவியாகவும் இருந்து இவர் தன்னுடைய பொறுப்புக்களை மிகத் திறம்பட நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு அமைப்புக்களில் செயற்குழு உறுப்பினராகவும் செயற்திட்ட ஆலோசகராகவும் இவர் பங்களிப்பு வழங்கி வருகின்றார்.

பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி துடிப்பும் செயற் திறனும் கொண்ட கல்வியியலாளராகவும் ஆய்வாளராகவும் திகழ்ந்தமைக்கு இவர் பெற்றுக் கொண்டுள்ள ஏராளமான பரிசுகளும் விருதுகளும் சான்றாக அமையும். 

அந்த வகையில், இவர் 2007 ஆம் ஆண்டு உலக அணுசக்திப் பல்கலைக்கழகம், பரிஸில் உள்ள அரபுலக நிறுவனம், கட்டார் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சரவதேச அமைப்புக்கள் முதலானவற்றினால் பரிசுகளும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய துறை சார்ந்து ஏராளமான ஆய்வு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள இவர், அரபு முஸ்லிம் பெண் சாதனையாளர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப்பட்டு வருகின்றார்.

அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற பூமியதிர்ச்சி, சுனாமி மற்றும் அணு ஆலைகள் வெடிப்பு என்பன தொடர்பில் அல் ஜெஸீரா ஆங்கிலத் தொலைக்காட்சி சேவைக்கு இவர் அளித்துள்ள பேட்டி இத்துறையில் அவருக்கிருக்கும் புலமையை உணர்த்தும்.

இவருடைய இணையதளம்:

http://www.ilhamalqaradawi.com



தொகுப்பு: 
எழுத்தாளர் லறீனா அப்துல் ஹக்



Wednesday, 20 July 2011

14. தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்!

தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்!

 தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்!
 *இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது
திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான்
அவசரமாக கிடைக்கும்.*

குர்ஆன் ஓதுதல்,

புத்தகம் வாசித்தல்,

பாடப் புத்தகங்களைப் படித்தல்,

நல்ல கட்டுரைகளை எழுதுதல்,

படித்துக் கொடுத்தல்,

தாய், தந்தைக்கு உதவுதல்,

தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல்

 போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள்.

வாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது.
ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.

உலக வரலாற்றில் வெற்றிக் கொடி நாட்டிய எத்தனையோ தலைவர்கள் தங்கள் பொழுது போக்காக எதையும் நினைக்கவில்லை வாழ்க்கை வழிமுறையாக அனைத்தையும் நினைத்து அதன்படி தங்களுக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைக் கூட வெற்றிப் பாதையின் வழிகாட்டிகளாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

உலகின் வெற்றிப் பாதையில் யாரும் காண முடியாத அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து அவர்களுக்கு நேர் வழி காட்டி உலகின் கேடு கெட்ட சமுதாயமாக
இருந்தவர்களை மனிதப் புனிதர்களாக மாற்றிய நபி பெருமானார் (ஸல்) அவர்கள்,

இந்த ஓய்வு நேரம் அதனைப் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் போன்றவற்றைப் பற்றி மிக அழகான முறையில் ஒரு வரியில் விளக்கிக் கூறுகிறார்கள்....


மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர். *
1. ஆரோக்கியம். 2. ஓய்வு நேரம்.

(புகாரி 6412)

ஓய்வு நேரத்தைப் பயண்படுத்துவதின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த அளவுக்கு தெளிவாக எந்த மனிதரும் சொல்லியிருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிகத்
தெளிவாக விளக்கியிருக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள்.

உலகை ஒரு பொழுதைக் கழிக்கும் காட்சியறையாக நினைத்து வாழும் இன்றைய நவீன மனிதர்கள் தங்கள் நேரங்களில் அதிகமானவற்றை வீன் கேளிக்கைகளுக்காகவே செலவு
செய்கிறார்கள். அதிலும் அதிகமானவர்கள் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகின் வழிகாட்டியான இஸ்லாம் தொலைக்காட்சிப் பெட்டி என்ற இந்த அரிய கண்டு பிடிப்புக்கு மற்ற மார்க்கங்கள் கொடுக்காத ஒரு முக்கிய முன்னுரிமையைக் கொடுக்கிறது.

பிரயோஜனமான செய்திகள், கருத்துக்கள், ஆரோக்கியமான தகவல்கள் என்று சிறந்த பல செய்திகள் அதில் ஒளி, ஒலி பரப்பப்படுகிறது. அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதை இஸ்லாம் எந்த நேரத்திலும் தடை செய்யவில்லை.

ஆனால் இன்று நாம் நமது சமுதாயத்திற்கும், நமக்கும் எது ஆரோக்கியமான செய்தியோ அதைத் தவிர்த்து விட்டு அதுவல்லாத மற்ற அனைத்து விஷயங்களுக்காகவும் நமது
நேரத்தை வீனாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி வீணன தொலைக் காட்சித் தொடர்கள், சினிமாக் கூத்தாட்டங்கள் பாடல் காட்சிகள், வக்கிர நடனங்கள், ஆபாசப் பேச்சுக்கள், கபடம் நிறைந்த வார்தைகள் என்பவற்றைப் பார்ப்பதினால் நமது வாழ்வில் நமது எண்ணத்தில், நடை முறையில் பல்வேறான கெட்ட சிந்தனைகள், நடவடிக்கைகள் தோற்றம் பெருவதை இன்றை நவீன உலக
ஆராய்ச்சிகள் தினமும் நிரூபிக்கின்றன.

*தொலைக் காட்சி பார்ப்பதின் நமக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள்.*
 *
*
*தொலைக் காட்சிக் கதையும், தனிமை போன்ற உணர்வும். ** *
*
*
சில தொலைகாட்சி நிகழ்சிகளிலும் ,படங்களிலும் வருகிற கதாபாத்திரங்கள் சில பிரச்சனைகளில் சிக்குண்டு இருப்பது போல காட்டுவார்கள். அத்துடன் வாழ்க்கையில் வெற்றி பெற தவறியவர்கள் சமூகத்தில் இருந்து விலகி தனியாக வாழ்வது போல காட்டுவார்கள்.


படமாக இருந்ததால் 02 மணி நேரத்திற்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அனால் இதுவே தொடர் நாடகங்களாக இருந்ததால் 02 வருடங்களுக்கு பின்  நாடகம்
முடியும் போதே பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது போல காட்டுவார்கள்.

இவ்வாறான படங்களயும், நாடகங்களையும் தொடர்ச்சியாக சிறுவர்கள் பார்க்கும் போது  நடிக, நடிகைககளை ரோல் மாடல்களாக நினைத்துப் பின்பற்றி இவர்களும் பிரச்சனைகளில் மாட்டுபட்டு தனியாக வாழ்வது போல உணர்ந்து தப்பான முடிவுகளை எடுக்கிறார்கள்.

காலப்போக்கில் மனிதர்களோடு பழகாமல் உயிர் அற்ற பொருட்களுடன் அல்லது விளையாட்டுப் பொருட்களுன் பேசிப் பேசி காலத்தைக் கழிக்கும் அவல நிலையில் தள்ளப்படுகிறார்கள்.

*
*
*நம்மை அறியாமல் நமக்குள் தோன்றும் முரட்டுத்தனம்.***

தொலைக் காட்சிகளினால் நமக்கு ஏற்படும் பாதிப்புக்களில் மிக முக்கிய இடத்தை பெருவது முரட்டுத் தன்மையாகும். சினிமாப் படங்களில், தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சண்டைக் காட்சிகள், கொலைகள் போன்றவற்றைப் பார்ப்பதினால் சிறு வயது முதலே குழந்தைகள் மனதில் முரட்டுக் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து
சினிமாவின் காட்சி நிஜ வாழ்க்கையின் வரையரையாக மாறிவிடுகிறது.

 ஒருவர் 20 வயதை அடையும் போது ஏறக்குறைய 200000  சண்டை காட்சிகளையும், 50000 கொலைகளையும்   தொலைகாட்சிகளில் பார்ப்பதற்கான சாத்திய கூறுகளும் சில இடங்களில் காணப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அண்மையில் குறிப்பாக சிறுவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, 1- 3 மணித்தியாலங்கள் வரை தொலைகாட்சி பார்க்கும், 22 .5 % ஆன  சிறுவர்கள் தனது சக தோழர்களுடன், மற்றவர்களுடன் சண்டையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

05 மணித்தியாலங்களிற்கு மேல் பார்க்கும் போது  இந்த 22.5 *%* என்பது 28 .8 %க்கு உயர்வடைகிறது. இருந்தாலும் 01மணித்தியாலத்திற்கும்  குறைவாகதொலைகாட்சி பார்க்கும்
5.7 % ஆன சிறுவர்களும் தப்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

வீடுகளில் பெற்றோருக்கு மத்தியில் நடக்கும் சண்டைகளும் இதற்கு ஒரு காரணியாகச் சொல்லப் படுவது மேலதிக தகவல்.

*செயல்பாடுகளில் சரியான கவணம் செலுத்த முடியாமை.*
*
*
சிறுவர்களை கவர்வதற்காக சிறுவர் தொலைகாட்சிகளும், சிறுவர் நிகழ்சிகளும் மிகவும் வேகமாக இடம் பிடித்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒளி, ஒலி பரப்ப்ப்படும்
போது  நிறங்கள் அதிகமானதாகவும், மிகவும் வெளிச்சம் அதிமானதாகவும் காட்டப்படும். காலப்போக்கில்
சிறுவர்கள் இந்த தொலைக் காட்சிகளின் ஒளி பரப்பு வேகத்திற்கு இயல்படைந்து விடுகிறார்கள்.

இதனால் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும் போது அந்தப் பாடங்களை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணமும், சுறுங்கிய கவனமும்
மாணவர்கள் மத்தியில் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.

சிறுவர்கள் அதிக நேரம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

டி.வி. பார்த்தல் கேம்கள் விளையாடுதல் போன்றவை பற்றிய ஆராய்சியில் ஒரு நாளைக்கு 02 மணி நேரங்கள்  சிறுவர்களுக்கு TV பார்க்கவும், கேம்ஸ்களை விளையாடவும்
கொடுத்து பரிசீலனை செய்த போது சிறிது  நாட்களின் பின்னர் குறிப்பிட்ட சிறார்கள் பாடங்களில் கவணம் செலுத்த சிறமப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
* *
*கனவில் கூட இன்பம் இல்லை.*
*
*
50 பேரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி   ,தாம் காணும் கனவுகளை பற்றிய செய்திகளை குறித்து வைக்க கூறி உள்ளார்கள். (இவர்களில் பாதிபேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், பாதிபேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இறுதியில் தாம் கண்ட கணவுகள் தொடர்பாக அவர்கள் தெரிவித்த பதில் ஆச்சரியத்தை ஊட்டியது.

 இறுதி முடிவை பார்த்த போது 25 வயதுக்கு உட்பட்டவர்களில் அநேகமானோர்  கண்ட கனவுகள் பல  வண்ண நிறங்களாக  தோன்றி உள்ளது. 55 வயதுக்கு மேற்பட்டவர்களில்
அநேகமானோர்  கண்ட கனவுகள் கருப்பு வெள்ளையில் தெரிந்துள்ளது. 55 வயதுக்கு மேற் பட்டவர்கள் அந்த
காலத்தில் கருப்பு வெள்ளை தொலைகாட்சியை பார்த்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

*அறியாத வயதும் தெரியாமல் செய்யும் தவறும்.***
*
*
தங்கள் குழந்தைகள் கொஞ்சம் எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் அவர்களின் சேட்டைகள், குறும்புத் தனங்களும் கூடவே சேர்ந்து ஆட்டம் காட்ட ஆரம்பிக்கும். தாய் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக அல்லது நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக தனது குழந்தைக்கு தொலைக் காட்டியை போட்டுக் காட்சிப்படுத்துகிறாள்.

பொம்மைப் படங்கள், சிறுவர் நடணங்கள், பேய்களின் (?) பெயரால் உருவாக்கப்படும் கதைகள் என்று தொடங்கி கட்டியணைத்து குத்தாட்டம் போடும் சினிமாப் பாடல்கள் வரை அந்தக் குழந்தைக் குறைவின்றி பார்த்து ரசிக்கும் நிலையை தாயே தாரைவார்த்துக்
கொடுக்கிறாள்.

இதனால் தனது குழந்தையின் வாழ்வில் எதிர்காலத்தில் என்ன மாற்றம் நிகழப் போகிறது? என்ன விபரீத்த்தைக் குழந்தை அடைந்து கொள்ளப் போகிறது என்பதை தாய் சிந்திக்க
மறுக்கிறாள்.

குழந்தை அறியாத வயதில் தெரியமால் செய்யும் தவறுக்கு துணை நிற்கும் தாயின் செயல்பாட்டால் பிள்ளையின் கவணம் திசை திருப்பப் பட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் பிள்ளையின் சிந்தனை கொண்டு வந்து நிறுத்தப் படுகிறது.

பிறந்து 29 மாதங்களே ஆன குழந்தைகளிடம் நடந்த ஆராய்ச்சியின் போது, அதிகம் TV பார்த்த குழந்தைகள் எதிர் காலத்தில் பாடங்களில் குறைவான  மதிப்பெண்களை பெற்றுக்
கொள்வதுடன்,  வகுப்பறைகளில்  சுறுசுறுப்பு அற்றுப் போய் சோம்பேரித் தனத்துடன் காணப்படுகிறார்கள்.

பிரான்ஸ் நாட்டில் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது என்பது மேலதிக தகவல்.

*தொலைக் காட்சி ரசனையும், உடல் பருமனும்.***
*
*
எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் தொடர்நது தொலைக் காட்சி பார்த்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருப்பவர்களுக்கு உடலில பெருகும் கலோரிகள் நிலை பெற்று உடல் பருமன் அசுர வேகத்தில் பெருக ஆரம்பிப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நடத்தப்பட்ட ஆராச்சியில் தொலைக் காட்சியை குறைவாக பார்த்தவர்கள் தினம் 5 மணி நேரங்கள் வரை பார்த்தவர்களை விட 120 கலோரிகளை தங்கள் உடம்பில் இருந்து
இல்லாமலாக்குகிறார்கள்.

தினமும் 5 மணி நேரங்கள் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு 120 கலோரிகள் கொழுப்பை தங்கள் உடம்பில் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்.

அன்பின் சகோதரர்களே ! தாய் மார்களே ! பெற்றோர்களே !

சினிமாவின் சீர் கேட்டைத் தவிர்ப்போம்.

தொல்லைக் காட்சியான தொலைக் காட்டியை
நல்லதுக்கு மாத்திரம் பயண்படுத்துவோம்.
என்ற கோரிக்கையை அன்பாக உங்களிடம்
முன்வைக்கிறோம்