Wednesday, 20 July 2011

14. தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்!

தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்!

 தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்!
 *இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது
திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான்
அவசரமாக கிடைக்கும்.*

குர்ஆன் ஓதுதல்,

புத்தகம் வாசித்தல்,

பாடப் புத்தகங்களைப் படித்தல்,

நல்ல கட்டுரைகளை எழுதுதல்,

படித்துக் கொடுத்தல்,

தாய், தந்தைக்கு உதவுதல்,

தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல்

 போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள்.

வாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது.
ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.

உலக வரலாற்றில் வெற்றிக் கொடி நாட்டிய எத்தனையோ தலைவர்கள் தங்கள் பொழுது போக்காக எதையும் நினைக்கவில்லை வாழ்க்கை வழிமுறையாக அனைத்தையும் நினைத்து அதன்படி தங்களுக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைக் கூட வெற்றிப் பாதையின் வழிகாட்டிகளாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

உலகின் வெற்றிப் பாதையில் யாரும் காண முடியாத அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து அவர்களுக்கு நேர் வழி காட்டி உலகின் கேடு கெட்ட சமுதாயமாக
இருந்தவர்களை மனிதப் புனிதர்களாக மாற்றிய நபி பெருமானார் (ஸல்) அவர்கள்,

இந்த ஓய்வு நேரம் அதனைப் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் போன்றவற்றைப் பற்றி மிக அழகான முறையில் ஒரு வரியில் விளக்கிக் கூறுகிறார்கள்....


மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர். *
1. ஆரோக்கியம். 2. ஓய்வு நேரம்.

(புகாரி 6412)

ஓய்வு நேரத்தைப் பயண்படுத்துவதின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த அளவுக்கு தெளிவாக எந்த மனிதரும் சொல்லியிருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிகத்
தெளிவாக விளக்கியிருக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள்.

உலகை ஒரு பொழுதைக் கழிக்கும் காட்சியறையாக நினைத்து வாழும் இன்றைய நவீன மனிதர்கள் தங்கள் நேரங்களில் அதிகமானவற்றை வீன் கேளிக்கைகளுக்காகவே செலவு
செய்கிறார்கள். அதிலும் அதிகமானவர்கள் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகின் வழிகாட்டியான இஸ்லாம் தொலைக்காட்சிப் பெட்டி என்ற இந்த அரிய கண்டு பிடிப்புக்கு மற்ற மார்க்கங்கள் கொடுக்காத ஒரு முக்கிய முன்னுரிமையைக் கொடுக்கிறது.

பிரயோஜனமான செய்திகள், கருத்துக்கள், ஆரோக்கியமான தகவல்கள் என்று சிறந்த பல செய்திகள் அதில் ஒளி, ஒலி பரப்பப்படுகிறது. அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதை இஸ்லாம் எந்த நேரத்திலும் தடை செய்யவில்லை.

ஆனால் இன்று நாம் நமது சமுதாயத்திற்கும், நமக்கும் எது ஆரோக்கியமான செய்தியோ அதைத் தவிர்த்து விட்டு அதுவல்லாத மற்ற அனைத்து விஷயங்களுக்காகவும் நமது
நேரத்தை வீனாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி வீணன தொலைக் காட்சித் தொடர்கள், சினிமாக் கூத்தாட்டங்கள் பாடல் காட்சிகள், வக்கிர நடனங்கள், ஆபாசப் பேச்சுக்கள், கபடம் நிறைந்த வார்தைகள் என்பவற்றைப் பார்ப்பதினால் நமது வாழ்வில் நமது எண்ணத்தில், நடை முறையில் பல்வேறான கெட்ட சிந்தனைகள், நடவடிக்கைகள் தோற்றம் பெருவதை இன்றை நவீன உலக
ஆராய்ச்சிகள் தினமும் நிரூபிக்கின்றன.

*தொலைக் காட்சி பார்ப்பதின் நமக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள்.*
 *
*
*தொலைக் காட்சிக் கதையும், தனிமை போன்ற உணர்வும். ** *
*
*
சில தொலைகாட்சி நிகழ்சிகளிலும் ,படங்களிலும் வருகிற கதாபாத்திரங்கள் சில பிரச்சனைகளில் சிக்குண்டு இருப்பது போல காட்டுவார்கள். அத்துடன் வாழ்க்கையில் வெற்றி பெற தவறியவர்கள் சமூகத்தில் இருந்து விலகி தனியாக வாழ்வது போல காட்டுவார்கள்.


படமாக இருந்ததால் 02 மணி நேரத்திற்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அனால் இதுவே தொடர் நாடகங்களாக இருந்ததால் 02 வருடங்களுக்கு பின்  நாடகம்
முடியும் போதே பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது போல காட்டுவார்கள்.

இவ்வாறான படங்களயும், நாடகங்களையும் தொடர்ச்சியாக சிறுவர்கள் பார்க்கும் போது  நடிக, நடிகைககளை ரோல் மாடல்களாக நினைத்துப் பின்பற்றி இவர்களும் பிரச்சனைகளில் மாட்டுபட்டு தனியாக வாழ்வது போல உணர்ந்து தப்பான முடிவுகளை எடுக்கிறார்கள்.

காலப்போக்கில் மனிதர்களோடு பழகாமல் உயிர் அற்ற பொருட்களுடன் அல்லது விளையாட்டுப் பொருட்களுன் பேசிப் பேசி காலத்தைக் கழிக்கும் அவல நிலையில் தள்ளப்படுகிறார்கள்.

*
*
*நம்மை அறியாமல் நமக்குள் தோன்றும் முரட்டுத்தனம்.***

தொலைக் காட்சிகளினால் நமக்கு ஏற்படும் பாதிப்புக்களில் மிக முக்கிய இடத்தை பெருவது முரட்டுத் தன்மையாகும். சினிமாப் படங்களில், தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சண்டைக் காட்சிகள், கொலைகள் போன்றவற்றைப் பார்ப்பதினால் சிறு வயது முதலே குழந்தைகள் மனதில் முரட்டுக் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து
சினிமாவின் காட்சி நிஜ வாழ்க்கையின் வரையரையாக மாறிவிடுகிறது.

 ஒருவர் 20 வயதை அடையும் போது ஏறக்குறைய 200000  சண்டை காட்சிகளையும், 50000 கொலைகளையும்   தொலைகாட்சிகளில் பார்ப்பதற்கான சாத்திய கூறுகளும் சில இடங்களில் காணப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அண்மையில் குறிப்பாக சிறுவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, 1- 3 மணித்தியாலங்கள் வரை தொலைகாட்சி பார்க்கும், 22 .5 % ஆன  சிறுவர்கள் தனது சக தோழர்களுடன், மற்றவர்களுடன் சண்டையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

05 மணித்தியாலங்களிற்கு மேல் பார்க்கும் போது  இந்த 22.5 *%* என்பது 28 .8 %க்கு உயர்வடைகிறது. இருந்தாலும் 01மணித்தியாலத்திற்கும்  குறைவாகதொலைகாட்சி பார்க்கும்
5.7 % ஆன சிறுவர்களும் தப்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

வீடுகளில் பெற்றோருக்கு மத்தியில் நடக்கும் சண்டைகளும் இதற்கு ஒரு காரணியாகச் சொல்லப் படுவது மேலதிக தகவல்.

*செயல்பாடுகளில் சரியான கவணம் செலுத்த முடியாமை.*
*
*
சிறுவர்களை கவர்வதற்காக சிறுவர் தொலைகாட்சிகளும், சிறுவர் நிகழ்சிகளும் மிகவும் வேகமாக இடம் பிடித்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒளி, ஒலி பரப்ப்ப்படும்
போது  நிறங்கள் அதிகமானதாகவும், மிகவும் வெளிச்சம் அதிமானதாகவும் காட்டப்படும். காலப்போக்கில்
சிறுவர்கள் இந்த தொலைக் காட்சிகளின் ஒளி பரப்பு வேகத்திற்கு இயல்படைந்து விடுகிறார்கள்.

இதனால் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும் போது அந்தப் பாடங்களை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணமும், சுறுங்கிய கவனமும்
மாணவர்கள் மத்தியில் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.

சிறுவர்கள் அதிக நேரம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

டி.வி. பார்த்தல் கேம்கள் விளையாடுதல் போன்றவை பற்றிய ஆராய்சியில் ஒரு நாளைக்கு 02 மணி நேரங்கள்  சிறுவர்களுக்கு TV பார்க்கவும், கேம்ஸ்களை விளையாடவும்
கொடுத்து பரிசீலனை செய்த போது சிறிது  நாட்களின் பின்னர் குறிப்பிட்ட சிறார்கள் பாடங்களில் கவணம் செலுத்த சிறமப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
* *
*கனவில் கூட இன்பம் இல்லை.*
*
*
50 பேரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி   ,தாம் காணும் கனவுகளை பற்றிய செய்திகளை குறித்து வைக்க கூறி உள்ளார்கள். (இவர்களில் பாதிபேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், பாதிபேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இறுதியில் தாம் கண்ட கணவுகள் தொடர்பாக அவர்கள் தெரிவித்த பதில் ஆச்சரியத்தை ஊட்டியது.

 இறுதி முடிவை பார்த்த போது 25 வயதுக்கு உட்பட்டவர்களில் அநேகமானோர்  கண்ட கனவுகள் பல  வண்ண நிறங்களாக  தோன்றி உள்ளது. 55 வயதுக்கு மேற்பட்டவர்களில்
அநேகமானோர்  கண்ட கனவுகள் கருப்பு வெள்ளையில் தெரிந்துள்ளது. 55 வயதுக்கு மேற் பட்டவர்கள் அந்த
காலத்தில் கருப்பு வெள்ளை தொலைகாட்சியை பார்த்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

*அறியாத வயதும் தெரியாமல் செய்யும் தவறும்.***
*
*
தங்கள் குழந்தைகள் கொஞ்சம் எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் அவர்களின் சேட்டைகள், குறும்புத் தனங்களும் கூடவே சேர்ந்து ஆட்டம் காட்ட ஆரம்பிக்கும். தாய் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக அல்லது நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக தனது குழந்தைக்கு தொலைக் காட்டியை போட்டுக் காட்சிப்படுத்துகிறாள்.

பொம்மைப் படங்கள், சிறுவர் நடணங்கள், பேய்களின் (?) பெயரால் உருவாக்கப்படும் கதைகள் என்று தொடங்கி கட்டியணைத்து குத்தாட்டம் போடும் சினிமாப் பாடல்கள் வரை அந்தக் குழந்தைக் குறைவின்றி பார்த்து ரசிக்கும் நிலையை தாயே தாரைவார்த்துக்
கொடுக்கிறாள்.

இதனால் தனது குழந்தையின் வாழ்வில் எதிர்காலத்தில் என்ன மாற்றம் நிகழப் போகிறது? என்ன விபரீத்த்தைக் குழந்தை அடைந்து கொள்ளப் போகிறது என்பதை தாய் சிந்திக்க
மறுக்கிறாள்.

குழந்தை அறியாத வயதில் தெரியமால் செய்யும் தவறுக்கு துணை நிற்கும் தாயின் செயல்பாட்டால் பிள்ளையின் கவணம் திசை திருப்பப் பட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் பிள்ளையின் சிந்தனை கொண்டு வந்து நிறுத்தப் படுகிறது.

பிறந்து 29 மாதங்களே ஆன குழந்தைகளிடம் நடந்த ஆராய்ச்சியின் போது, அதிகம் TV பார்த்த குழந்தைகள் எதிர் காலத்தில் பாடங்களில் குறைவான  மதிப்பெண்களை பெற்றுக்
கொள்வதுடன்,  வகுப்பறைகளில்  சுறுசுறுப்பு அற்றுப் போய் சோம்பேரித் தனத்துடன் காணப்படுகிறார்கள்.

பிரான்ஸ் நாட்டில் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது என்பது மேலதிக தகவல்.

*தொலைக் காட்சி ரசனையும், உடல் பருமனும்.***
*
*
எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் தொடர்நது தொலைக் காட்சி பார்த்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருப்பவர்களுக்கு உடலில பெருகும் கலோரிகள் நிலை பெற்று உடல் பருமன் அசுர வேகத்தில் பெருக ஆரம்பிப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நடத்தப்பட்ட ஆராச்சியில் தொலைக் காட்சியை குறைவாக பார்த்தவர்கள் தினம் 5 மணி நேரங்கள் வரை பார்த்தவர்களை விட 120 கலோரிகளை தங்கள் உடம்பில் இருந்து
இல்லாமலாக்குகிறார்கள்.

தினமும் 5 மணி நேரங்கள் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு 120 கலோரிகள் கொழுப்பை தங்கள் உடம்பில் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்.

அன்பின் சகோதரர்களே ! தாய் மார்களே ! பெற்றோர்களே !

சினிமாவின் சீர் கேட்டைத் தவிர்ப்போம்.

தொல்லைக் காட்சியான தொலைக் காட்டியை
நல்லதுக்கு மாத்திரம் பயண்படுத்துவோம்.
என்ற கோரிக்கையை அன்பாக உங்களிடம்
முன்வைக்கிறோம்

Sunday, 10 July 2011

13. ஹிஜாப் என்னுடைய அணிகலன்! மும்பையில் ஒரு ’நிகாப்’ புரட்சி


. 

ஹிஜாப் என்னுடைய அணிகலன்! -  

சகோதரி.  ஆஃப்ரீன்

மும்பையில் ஒரு ’நிகாப்’ புரட்சி

  


மும்பையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நின்று முனிசிபாலிட்டியின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்துச் செல்வதில் நிகாப் அணிந்த ஒரு சகோதரிக்கும் பங்குண்டு என்றால்...மிகை என்ன... மிக மிக மிகைதான் இல்லையா.

18 வயதிலேயே இஸ்லாத்திற்கு வந்ததோடல்லாமல் திருமணத்திற்குப் பின் சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவும் மக்கள் பிரட்சினைக்காக பாடுபடவும் வேண்டும் என்றதும் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடும் இடத்தில் அக்கறையை மட்டும் மையமாகக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறார், சகோ.ஆஃப்ரீன். 

”ஹிஜாப் என்னுடைய அணிகலன், அதை அணிவதால் என் சமூகத்திற்கு பாடுபட எனக்கு எந்த விதத் தடையுமில்லை” என்கிறார் சகோதரி. நிகாபை அணிவதாலும் முஸ்லிமாய் இருப்பதாலும் இது வரை தடையெதுவும் கண்டதில்லை எனக்கூறும் இந்த சகோதரி, தன் வெற்றிக்கு முதல் காரணமாக அல்லாஹுத’ஆலாவையும், அதன் பின் தன்னுடைய ஒவ்வொரு அடியிலும் துணை நிற்கும் கணவனையுமே புகழ்கிறார். 


நிகாப் இருப்பதால் வேலை செய்யுமிடத்தில் ஏதேனும் இடையூறோ தயக்கமோ இருக்குமே என்றால், எல்லா நிலையிலும் இந்த மக்கள் எனக்கு துணை நிற்பதோடல்லாமல், சில சமயம் எதிர்பார்க்காத அளவிற்கும் ஒத்துழைப்பு நல்குகின்றனர் என்கிறார்.

மராத்தி, ஹிந்தி, குஜராத்தி தவிர ஆங்கிலமும் தெரிந்த இவர், தேர்தலில் முக்கிய வாக்குறுதிகள் அளித்தது குடிநீர், ரோடு மற்றும் சுகாதார வசதிகளின் மேல்தான். அதனாலேயே பிரச்சார நேரத்தில் சில பிரச்சினைகளையும் சந்தித்துள்ளார். “அன்றைய தினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. 


அந்தப் பகுதி மக்களோ அதிகாலை 4 மணிக்கே எழுந்து குடிநீருக்காக லைனில் நிக்க வேண்டிய நிலை. எனவே அவர்களின் கோபாவேசத்தினாலும் அதில் ஏற்பட்ட சலசலப்பினாலும் கிட்டத்தட்ட என்னுடைய வாகனத்திலிருந்தே கீழே விழும் சூழ்நிலையாகி விட்டது” என்கிறார்.

தன்னுடைய பணியில் சாதனையாக சகோ.ஆஃப்ரீன் நினைப்பது, முனிசிபாலிட்டியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மசோதா. 


அப்படி என்ன மசோதா? 


பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு கொண்டு போகும்போதும் போஸ்ட்மார்ட்டம் முடித்து வரும்வரையும் ஒரு பெண் டாக்டரும், உதவிக்கு ஒரு பெண்ணும் கட்டாயம் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆணையே அது. 


ஏன் இப்படி ஒரு மசோதா என்றால், சட்டென பதில் வருகிறது, சகோதரியிடமிருந்து.


 “ஒரு தடவை ஒரு 20 வயதுப்பெண் விபத்தில் இறந்து போனார்.




 அவருடைய உடலை வாங்க மருத்துவமனைக்குச் சென்றபோது  ஒரு மனிதன் அந்தப் பெண்ணின் உடலில் போர்வை போர்த்தும் சாக்கில் அவளை அவசியமற்ற விதத்தில் தொடுவதைக் கண்டேன். 


அன்றெழுந்த முடிவு இது” என்கிறார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினையே கல்வியறிவில்லாததும் வேலைஞானம் இல்லாததும்தான் என்னும் சகோ.ஆஃப்ரீன், 


தன்னுடைய கணவரின் துணை கொண்டு மக்களுக்கென ரேஷன் கார்டு, பிசி, ஓபிசி பத்திரங்கள், வாக்காளர் அட்டை போன்ற அத்தியாவசிய அட்டைகளைப் பெறுவதற்கான வழிமுறை வகுப்புகளையும் அவ்வப்போது நடத்துகிறார்.


 ”நம் முஸ்லிம் சமூகத்தில் இந்த மாதிரி தேவையான அட்டைகளை வாங்கும் வழிமுறைகள் தெரியாததே ஸ்காலர்ஷிப், அரசாங்க வேலை போன்ற பல அரசாங்க உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போக வைக்கிறது” என்கிறார். 


இதற்காக கோடை காலத்தில் மாதம் முழுக்கவும் கேம்ப்கள் நடத்துகிறார். இவரின் உதவியாளார்கள், வீட்டிற்கு வீடு சென்று கதவை தட்டியழைத்தும் வந்து இவற்றில் பங்கு பெற வைக்கின்றனர்.

அரசியலில் நுழைந்து விட்டால் ஆண்களின் ஆதிக்கத்தைச் சந்தித்துத்தானே ஆகவேண்டும் என்ற நிலையில்,


 சட்டரீதியான, நுணுக்கமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அரசியல் ரீதியான பேச்சுக்களுக்கும் செயல்களுக்கும் தன் கணவரின் முடிவில் விட்டு விடுகிறார். 


பதிப்பு : பாத்திமா ஜொஹ்ரா 


-------------------------------------------------------------------------------------


3:195. ..................“உங்களில் ஆணோ,பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன்,................................






4:124ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்


9:71முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.


16:97ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.


40:40“எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.


-----------------------------------------------------------------------------------------------










சகோதரிகளே! 


நீங்களும் கிளம்பிவிட்டீர்களா?! 


சமூக பணியாற்ற.....






செய்தி மூலம், ஆங்கிலத்தில் படிக்க :


 http://www.coastaldigest.com/index.php?option=com_content&view=article&id=26458:hijab-is-my-ornament-mumbai-corporator-afreen

Hijab is my ornament: Mumbai corporator Afreen


Mumbai: Imagine a scene where a burqa-clad woman, among more than two hundred corporators of Shiv Sena, Maharashtra Navnirman Sena, Congress and Nationalist Congress Party, is shouting for the problems of the Mumbai Municipal Corporation. Mother of two teenagers, Afreen Fayyaz Ahmed is the Congress corporator of Mumbai Municipal Corporation for last 3 years.

Born to Parsi parents, educated in one of the best schools in south Mumbai to marrying Fayyaz Ahmed and becoming a corporator, story of Afreen is very interesting.

Afreen converted to Islam at the age of 18 years and married to Fayyaz Ahmed, former Member of Maharashtra Legislative Assembly and was just a housewife till Madanpura Municipal seat reserved for women.

Conditions in the politics compelled her to get out of her home and fight the corporation election. Although, it would be normal for Muslims but very strange for others not to see their own elected corporator ever and vote for her. Imtiyaz Ahmed, 30, a local of her area said, “No one has ever seen Afreen Fayyaz Ahmed but everybody knows her and get their work done.”

Afreen, while talking to TwoCircles.net said, “Hijab is my ornament and it never stops me from serving the people of my area.” She also added that she derives all the courage from Allah and her husband Fayyaz Ahmed is the biggest support for her.

Sharing her experience of working along with hundreds of men in the corporation, she said, “Initially it was bit odd but now I am used to it because of their co-operative nature. They all respect and care for me. Sometimes they go out of the way to co-operate me.”

In Maharashtra and specially in Municipal Corporation Marathi is the only way to communicate the grievance. “Knowing Marathi is compulsory if one likes to get her work done in Maharashtra and Alhamdulillah, I speak good Marathi besides English, Gujarati and Hindi” said Afreen.

Clean water supply, road and drainage are on top of her agenda because of which she has been treated badly by the voters while campaigning. She remembers an incident while campaigning, “I was nearly thrown out of the door and treated very badly because water supply was nearly collapsed in the area and people has to wake up at around 4 a.m. to store the water.”

After the incident Afreen was literally crying but gathered the courage and continued her election campaign with the help of her husband and brother-in-law and finally won the election.

She said that her biggest achievement would be to get her proposal passed by the corporation -- a woman doctor and labor must be appointed for a female dead body during the post mortem.

She said, “Once in an accident a 20-year-old girl died and I had to go to the Hospital for her dead body. I found a man was covering the body of that girl and naturally was touching the body of that poor girl.” She was shocked to see that and decided to move a proposal in this regard and also wrote a letter to the Prime Minister.

On the backwardness of Muslims, she believes that awareness about education and employment to Muslims will truly empower them.

Afreen, with the help of her husband, organizes guidance camps for Ration Cards, OBC, Certificate, PAN Cards, Electoral role, Domicile certificates. She said, “We Muslims don’t know how to get all these important documents which are the prerequisites to get any kind of government facilities such as scholarships schemes, employments.”

She has also planned a permanent guidance center in the area and a month long campaign during the month of May, the summer vacation. She said that she and her volunteers will go door to door for the awareness campaign and will facilitate them to get these important documents.

Afreen is also aware of the difficulties women face in the male dominated politics. She accepted that all the social and technical job is done by her whereas her husband takes care of the other aspects and more importantly the politics.

She parried the question about 50% reservation for Muslims in the corporations but her husband Fayyaz Ahmed vehemently opposed the bill put forward by his own party.

Saturday, 9 July 2011

12. அசத்தியம் அழிந்தே தீரும்! ஹிஜாபை உறுதியாக கடைபிடிக்கும் பெண்களினால்...



அசத்தியம் அழிந்தே தீரும்!  
ஹிஜாபை உறுதியாக கடைபிடிக்கும் பெண்களினால்...
சமீப காலமாக மேற்கத்திய அரசாங்க உயர் மட்டத்திலும், அதைத் தொடர்ந்து உலக செய்தி ஊடகங்களிலும் இஸ்லாமிய ஹிஜாப் பூதகரமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.


இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பொய்ப் பிரச்சாரத்தின் பிரதிபலிப்பா?


இராக், ஆப்கானிஸ்தானில் தொடுக்கப்பட்ட போரில் படுதோல்வி அடைந்ததின் மன உளைச்சலா?


அந்த நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையா?


இஸ்லாமிய கலாச்சார ஒற்றுமையும் சகோரத்துவ வலிமையும் கண்ணைக் குத்துகிறதா?


அல்லது உலகத்திலிருந்து இஸ்லாத்தை அடியோடு ஒழித்துக்கட்ட எடுக்கப்பட்ட அனைத்து சூழ்ச்சிகளும் முயற்சிகளும் தோற்றுப் போய், நேர்மாற்றமாக துருக்கியிலிருந்து அனேக மேல நாடுகளிலும் இஸ்லாமியர்கள் ஆட்சி பிடிக்கும் பயம் மனதை உலுக்குகிறதா?


அல்லது இவை எல்லாமே காரணங்களாக அமைந்து விட்டதா? என்று சொல்ல முடியவில்லை.
உலக ரீதியில் இஸ்லாம் மட்டுமே மதக் கோட்பாடுகளையும், கலாச்சாரங்கைளயும் முழுமையாக பேணுவதில் தனித்தன்மை பெற்று விளங்குகிறது.


பெண்ணுரிமை என்ற பெயரில் மத கட்டுப்பாடுகளை எல்லாம் தூக்கி வீசி விட்டு மனோ இச்சைகளை சுதந்திரமாக கொண்டாடலாம் என்று போட்ட கணக்குகளும் திட்டங்களும் ஹிஜாபை உறுதியாக கடைபிடிக்கும் பெண்களினால் சுக்குநூறாகிவிட்டன.


ஆகவேதான் ஹிஜாப் ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது போலும்.


கணிசமான முஸ்லிம்கள் வாழும் பல நாடுகளுக்கு பல தடவை விஜயம் செய்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வுகளை சொல்லும் ஷைய்குல் இஸ்லாம் மெளலானா முஃப்தி முஹம்மது தகீ உஸ்மானி அவர்கள் சமீபமாக இரண்டு வார பயணமாக நம் நாட்டுக்கு வந்திருந்தார்கள்.
தாருல் உலூம் தேவ்பந்தில் மாணவர்களிடத்தில் பேசும் பொழுது அவர் சொன்ன ஒரு முக்கியமான கருத்தை இங்கே நினைவு கொள்ள வேண்டியது அவசியம்.


அவர்கள் சொன்னார்கள், உலகமெல்லாம் இஸ்லாத்திற்கு எதிராக சொல்லப்படும் அவதூறுகளைக் கண்டு நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. உண்மையில் அதை விட பன் மடங்கு சக்திவாய்ந்த மின் அலைகள் போல சாதகமான கருத்துக்கள் இஸ்லாத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கின்றன. நான் கண்கூடாக அதைப் பார்க்கிறேன். புதிய தலைமுறை இஸ்லாத்தின கோட்பாடுகளை மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்கிறது. மனிதர்களை கடுமையாக பாதிக்கும் பல முக்கியமான பிரச்சனைகளுக்கு இஸ்லாம் மட்டுமே சரியான தீர்வு சொல்கிறது என்று அறிவுஜீவிகள் பலர் நம்புகின்றனர்.


ஆகவே, தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்ற வணக்கக் கடமைகளில் நாம் பேணுதலாக இருப்பதுடன் மாற்றார்களுடன் நல்லுறவுகள், கொடுக்கல் வாங்கல், தூய்மை, துப்புரவு, நல்லொழுக்கங்கள், மனிதநேயம், அன்பு, பாசம், சேவை போன்ற நற்குணங்களிலும் முன்பு போல் மீண்டும் நாம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடிப்பது காலத்தின கட்டாயம்.


இயற்கைக்கும் மனிதனின் ஆழ்ந்த சிந்தனைக்கும் ஏற்றதான இஸ்லாத்தின் தூய்மையான கொள்கைகள் பலரையும் கவர்ந்து வரும் இவ்வேளையில் இறை நம்பிக்கையிலும், வாழ்வியல் மற்றும் செயல்முறைகளிலும் மிதமான கருத்துகளையும், போதனைகளையும் இஸ்லாம் உள்ளடக்கியுள்ளது என்பதை சொல் மற்றும் செயல் ரீதியாக நாம் எடுத்துக் காட்டினால் அசத்தியம் தானாக அழிந்து சத்தியம் இன்னும் வேகமாக பரவும் இன்ஷா அல்லாஹ் !


நன்றி: மனாருல் ஹுதா மாத இதழ்
Posted by: Girls Madhrasa, Mannargudi. 




Friday, 8 July 2011

6. சுகமான பிரசவமும், சீரழிக்கும் சிசேரியன்களும்

சுகமான பிரசவமும், சீரழிக்கும் சிசேரியன்களும்

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் 
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) 
(Chinese Traditional Medicine).

சம்பவம் 1:

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், 



அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், 


அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், 


நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.

சம்பவம் 2:

தஞ்சையிலுள்ள எனது ‘தி ஹெல்த் ரிசோட்’ மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர். 



நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும், மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். 


பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், 


ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று, மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும்.

சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். 
இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. 


ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்?


உலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? 



டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். 


கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, 


சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். 

டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். 



சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.

அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். 



இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், 


சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன.

தேவையில்லாத இரசாயன பொருட்கள்:

கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், 



இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.


கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள்

கால்சியம் மாத்திரைகள் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி

இரும்புச் சத்து மாத்திரைகள் பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை

அயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்
குளோரின் உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.
பாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்

மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்
பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்

சோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன

குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.

விட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்

விட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி

விட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி

விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்

விட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு

விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்

விட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை

விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)
விட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள்

விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை

விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி


சவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். 



மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண் டாக்டர் 3 பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், 
இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார்.


தேவையற்ற கட்டுபாடுகள்:

கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. 



வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். 


கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். 


சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா?


திட்டமிட்ட சதியா?

பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.


சிசேரியன் மோசடிகள்

அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?.


உண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார்,



 இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். 


என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை.

அந்த பெண்மணி சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும் பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு சென்று அவரிடம் ‘ஆச்சரியமான செய்தி ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்’ என்றேன்.

அவர் உடனே இதில் என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவா? என்றதும் நான் வியந்தே போனேன், உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.


தேவையில்லாத மருத்துவ செயல்கள்:

விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது. 

உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.

சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்:

சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.

தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.

தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.

சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது.


சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?:

கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.

கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.

ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.


இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:

கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.

வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:

கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.

பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .


கர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க:

கணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட இடத்தில் 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம் குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது (பார்க்க படம் ).


ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், 



அதற்காக பாடுபடுவோம்..


வெற்றி பெறுவோம்;..இன்ஷா அல்லாஹ்..

நன்றி: http://naturecuredr.com/articles/cesarean.htm



---------------------------------
19:22அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.


19:23பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.


19:24(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.


----------------------------------------------------------------------------------------

சகோதரிகளே! 
நமது ஊரில், நமக்காக நமது சமுதாயத்தின் இக்கால, வருங்கால ஆரோக்கியமான சமுதாயத்தை
உருவாக்க சகோதரிகளின் உடல் நலனுக்காக ஆக்கபூர்வமான,
அவசிய தேவையான 
மருத்துவமனை கட்ட நமது ஊர் தலைவர்கள் முன் வர துவா செய்யவும்.


(நமது சகோதரிகளுக்கு சிசேரியன் மூலம் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தையும் கொடுத்து, ஆரோக்கியமற்ற சமுதாயமாக மாற்றி  வருவதற்கும் முற்று புள்ளி வைக்க வேண்டும் .)


‘மனிதன் இறந்து விடடால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அமல்கள் அனைத்தும் அவனை விட்டும் துண்டிக்கப்படுகின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


அந்த மூன்று விஷயங்கள் 


1) நிரந்தர தர்மம்
 2) பயன் தரும் கல்வி 
3) இறந்தவருடைய சாலிஹான பிள்ளைகள் செய்யும் துஆ


 (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)